காதலற்ற நொடிகளில்
கவிதை சொல்வது போலவே,
நீயற்ற நேரங்களில்,
பொழுதைக் கழிப்பது!
**********************************************************************************************

விரும்பிய விழுமியங்கள்,
விருப்பத்துடனே விழுகின்றன,
உனக்காய் எழுதும்
ஒவ்வொரு பொழுதும்.
**********************************************************************************************

வெளிகளற்ற வெளியில்,
மொழிகளற்றே பேசுகிறோம்,
நீயும் நானும்.
**********************************************************************************************
மௌனம்கூட மௌனமாகியது,

நீ எந்தன்
இதழ் பதித்தபோது!
**********************************************************************************************
சத்தியமாய் நான்

குருடன்தான்,
உன்னைக் காணா
ஒவ்வொரு நொடியும்.
**********************************************************************************************
நீ வெட்கித் தலைகுனியும்

ஒவ்வொரு பொழுதுக்குமாய்த்
தவிக்கிறேன்,
வெட்கமின்றியே நானும்!
**********************************************************************************************
-சிவசங்கர்.
21 comments:
nalla iruku karadi sir,,,, alugatheenga....
கவிதையைவிட அதற்கான படத்தேர்வு மிக அருமை.
அசத்தல் வரிகள்...
கலக்குங்க...
சுகன்யா...
நான் அழவில்லை...
இதெல்லாம் சும்மா....
மற்றும் நன்றிகள் பல...
அன்பு....
நீ எதைப் பார்த்து சொன்னேன்னு எனக்குத் தெரியும்லே....
நன்றி...
அரசரே,
நன்றிகள் பல...
அழகான கவிதைகள்!
மௌனம்கூட மௌனமாகியது,
நீ எந்தன்
இதழ் பதித்தபோது!//
இதழ்களின் இன்பக்கதறல்கள் கேட்கவில்லையா??
எஸ்.கே.
நன்றிகள் பல!
மௌனம்கூட மௌனமாகியது,
நீ எந்தன்
இதழ் பதித்தபோது!//
இதழ்களின் இன்பக்கதறல்கள் கேட்கவில்லையா??///
மதனு, சத்தியமாய் நீதான்யா கவிஞன்...
ஒரு மனிதன் வேலையற்று இருக்கும் பொழுது அவனால் என்னவெல்லாம் சிந்திக்க & செயல்படுத்த முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.......
என்னைப் போல் ஒருவன்....
நன்றி பாலா...
சின்ன சின்ன வரிகளில் அழகாய் காதல் பளிச்சிடுகிறது.
இந்திரா....
நன்றி..நன்றி...நன்றி....
ரைட்டு....
:-)
( ஹி..ஹி.. கவிதை ட்புரியலேனாலும், சமாளிப்பமில்ல..ஹி..ஹி)
பட்டாபட்டியாருக்கு நன்றிகள் பல...
புகைப்பட தேர்வு அருமை :)
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன். வருகை தரவும்...
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_28.html
Vandhutten thala...
Nandri..
காதல் குருடா..உன் காதல் கதறல்கள் எனக்குப்பிடித்தது..
நன்றிங்க!!!
Post a Comment