Monday, December 13, 2010

காதல் கதறல்கள்....


காதலற்ற நொடிகளில்

கவிதை சொல்வது போலவே,

நீயற்ற நேரங்களில்,

பொழுதைக் கழிப்பது!

**********************************************************************************************

விரும்பிய விழுமியங்கள்,

விருப்பத்துடனே விழுகின்றன,

உனக்காய் எழுதும்

ஒவ்வொரு பொழுதும்.

**********************************************************************************************

வெளிகளற்ற வெளியில்,

மொழிகளற்றே பேசுகிறோம்,

நீயும் நானும்.

**********************************************************************************************
மௌனம்கூட மௌனமாகியது,

நீ எந்தன்

இதழ் பதித்தபோது!

**********************************************************************************************
சத்தியமாய் நான்

குருடன்தான்,

உன்னைக் காணா

ஒவ்வொரு நொடியும்.

**********************************************************************************************
நீ வெட்கித் தலைகுனியும்

ஒவ்வொரு பொழுதுக்குமாய்த்

தவிக்கிறேன்,

வெட்கமின்றியே நானும்!
**********************************************************************************************
-சிவசங்கர்.

Saturday, December 4, 2010

முத்தம்.....


வருத்தமற்ற நொடிகள்

ஏங்கிக்கிடக்கிடக்கின்றன,

உன் செவ்விதழ் சிந்தும்

முத்தத்திற்காய்!


--சிவசங்கர்.

Monday, October 25, 2010

கவிதைகளின் வார்த்தைகள்!

என்னவளைப் பற்றிய கவிதைகளில்,

வர்ணித்த வார்த்தைகளெல்லாம்,

அவளின் அழகை முன்னிறுத்தி,

அடக்கியே வாசிக்கின்றன....


--சிவசங்கர்.

Tuesday, October 19, 2010

காதலியற்ற தீபாவளி!


உனைப் பிரிந்து

கொண்டாடும் தீபாவளியில்

வெடிக்கப் போவது பட்டாசுகள் மட்டுமல்ல..

என் மனமும்தான்....



--சிவசங்கர்

Monday, October 18, 2010

என் பார்வை..

காதலுக்காய் ஏங்கும்
என் கலங்கிய முகத்துடன்,
மலர்ந்த உன் முகத்தை
மறைந்திருந்தே பார்க்கிறேன்!


--சிவசங்கர்.
(இரவு ராசாவின் இனிய புகைப்படத்தைப் பார்க்கையில் தோன்றியது..நீங்களும் பாருங்களேன்)

Saturday, October 16, 2010

காதல்...கவி....


விலகியிருந்த என்னை

மீண்டும் கவியியற்றத் தூண்டியது

உன் காதல்!


தள்ளியிருந்த என்னை

காதலிக்கத் தூண்டியது

உன் முத்தம்!


காதலைத் தூண்டிய நீயும்,

கவிதையைத் தூண்டிய காதலும்,

உன்காதல் வழிவந்த முத்தமும்,

நீக்கமற நிறைந்துவிட்டது

என்மனதில்!


-- சிவசங்கர்.


Friday, October 15, 2010

காதலியின் முத்தம்....

நீ

திகட்டத் திகட்டக்

கொடுத்த முத்தம்,

உன்னைக் காதலிக்காமல்

இருக்க விடுவதில்லை!



-- சிவசங்கர்.

Thursday, October 14, 2010

ஏக்கம்!

ஐந்திலக்கச் சம்பளம்,

பெருசா ஒரு கம்ப்யூட்டர்,

வண்ணத் தொலைபேசி,

வாசமான சென்ட்டுகளும்,

வாய் நெறையச் சிரிப்போடு

ஊருவிட்டு ஊரு வந்தோம்.

மக்களும் பவுசுதான்,

மரியாதை பெருசுதேன்.

ஏசி ரூமுதான்,

பேச்செல்லாம் கோடிதான்,

விடுப்புக்குப் போறதெல்லாம்

விமான மார்க்கம்தான்.

கோமாளி வேடிக்கை,

கையில வாட்சும்,

சிறுசு பெருசா புத்தகமும்,

ஒட்டாம ஓடுது வாழ்க்கை!

மாடு மேச்சுப் பால் கறந்து,

ஏரோட்டி, ஊர் சுற்றி,

சிறுசு பெருசாப் பஞ்சாயத்துப் பண்ணி,

அம்மா கையில் சோறுண்ணும்

எம்மனோரைப் பார்க்கையிலே,

ஏங்கித்தான் போகுது மனசு..



--ஏக்கத்துடன்,

சிவசங்கர்.

உந்தன் நினைவு!


வெட்கமின்றிப் பேசித் தீர்த்த
வார்த்தைகளும்,

இடைவெளியற்று கட்டுற்றிருந்த
நினைவுகளும்,

தனிமையிலும் வெறுமையிலும்

நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது
உன்னை!
--சிவசங்கர்.

முத்தம்....

மௌனமான நொடியில்

உன் பூவிதழில் கொடுத்த

ஈரமான முத்தம்,

இனித்துக்கொண்டே இருக்கிறது

என்னில்!


--சிவசங்கர்.

Wednesday, October 13, 2010

காதலியே.......


நான் கொடுத்த

முத்தமெல்லாம்

கணக்கிட்டு வைக்காமலிருக்கும்

நீயெல்லாம் என் காதலியா?


--சிவசங்கர்.

Saturday, October 9, 2010

காதல் வரைமுறை!


நீ பெயர்த்த மனதைப்

பெயரளவில் கவர்ந்துகொண்டால்,

காதல்!


--சிவசங்கர்.

முத்தம்பற்றி....


அழகான உன் உதட்டோர

மச்சத்தின்,

இதமான தழுவல்தான்

முத்தமோ?


--சிவசங்கர்.

Friday, October 8, 2010

மோதல்-காதல்!


மோதல் செய்த வினை

இன்று

காதல் செய்கிறேன்!



-- சிவசங்கர்.

Thursday, October 7, 2010

காதல் முத்தம்!


விருட்டென எழுந்து செல்கையில்

என் கரம்பிடித்துக் கொடுத்த

இதழோர முத்தத்திற்காய்

காதலித்துக் கொண்டே

இருக்கலாம் உன்னை!


--சிவசங்கர்.

Tuesday, October 5, 2010

அழகு முற்றம்!

எத்தனை முயன்றும்
தோற்றேன்!
உன் அழகுக்கு முன்னால்
என் கவிதையெல்லாம்
அழகாகவே தோன்றவில்லை!

--சிவசங்கர்.

Tuesday, September 21, 2010

என்செய்வேன்?

உன் பெயரைத்
தாளில் எழுதினால்,
கவிதையாகிவிடுகிறது.
சுவற்றில் எழுதினால்,
ஓவியமாகிவிடுகிறது.
கல்லில் எழுதினால்,
சிற்பமாகிவிடுகிறது- ஆதலால்,
உன்பெயரை என்னுள் எழுதினேன்.
காதலாகிவிட்டது!

-- சிவசங்கர்.

Monday, September 13, 2010

கவிதைகளின் நேரம்!

பதிலுரைக்கவே விழைகிறேன்,
உன் கேள்விகளின் போதெல்லாம்!
உன்னிடம் பதிலாக மௌனமும்,
என்னிடம் பதிலாகக் கவிதையும்
முளைக்கின்றன!

-- சிவசங்கர்.

Wednesday, September 8, 2010

உன்னாலே! உன்னாலே!!

அழகிய விழிகளுடனும்,

அதிராத பேச்சுடனும்,

அழகிதான் நீ!

கர்வம்தான் எனக்கும்,

அவளின் காதலனாய்!



- சிவசங்கர்.

Tuesday, July 27, 2010

மௌன ராகம்- என் காதல்!

மனதின் சந்துகளில்,
உழல்கிறது காதல்!
கண்களின் ஓரங்களில்,
கசிகிறது காதல்!
காது மடல்களில்,
ரீங்கரிக்கும் காதல்!
உன்னையும் என்னையும்,
மௌனமாக்கிய காதல்!
உணர்வுகளின் படலத்தை
உருப்போட முடியாமல்- கவிதையாய்
வரிப்போடுகிறேன்!

- சிவசங்கர்.

Thursday, July 22, 2010

காதல் ஒரு கடிவிஷம்!

உன் விழிப்பார்வையில்
என் மனம் வீழ்ந்தது!
காதல் சொல்ல தைரியமில்லை
கவிதை சொல்ல வார்த்தையுமில்லை- எனக்கு!
புரியா உணர்வும்,
பிரியா மனமும் எனக்கு உண்டடி.
என் மனத்தை
உளவு செய்த நீ,
களவு செய்வது எப்போது?
--
சிவசங்கர்.

Tuesday, July 13, 2010

பேசா மடந்தையிடம்
சொல்லக் காதல்
எமது!
வெற்றுக் காகிதத்தில்
எழுதாக் கவிதை
எமது!
வெள்ளைச் சுவற்றில்
புனையா ஓவியம்
எமது!
சொல்லாக் காதல்
எனது!
புரியாக் காதல்
உனது!
காத்திருக்கிறேன் காதலுடன்,
கண்ணே உன் காதலுக்காய்!

--
சிவசங்கர்!

Wednesday, July 7, 2010

காதல் கதறல்!


மெல்ல மெல்ல விலகுகிறேன்

உன்னிலிருந்து நிழலாய்!

போகாதே காதல் வெளிச்சத்திலிருந்து-

கதறுகிறது என் காதல்!


- காதலுடன்,

சிவசங்கர்.

Thursday, July 1, 2010


கவிதை எழுத, காதலால் நேரமில்லை!
காதலை சொல்ல கவிதை வரவில்லை! சொல்லாக் காதலும்
எழுதாக் கவிதையும்
என்னோடு!


- செல்லாக் காசாய் இருப்பேன் உன் கண்ணசைவு வரை!
சிவசங்கர்.

Wednesday, June 30, 2010

காதல் சதுரங்கம்!

நட்புக் குதிரைகள்
வெட்டுப்பட்டநேரத்தில்,
பதினாறு கட்டம் நகர
கலங்காமல் காத்திருக்க,
மந்திரியார் கூட்டத்துடன்
மந்தகாசமாய் புன்னகைக்கிறாய்!
வெட்டுப்பட்ட சேவகர்கள்
வெறித்த பார்வையால் எனை நோக்க,
பதினைந்து கட்டங்கள்
பல்நோக்கில் கடந்துவர,
ஒற்றை நகற்றலுக்குபின் என்னுடன்
விளையாட வருவாயா?
-
காத்திருக்கும்........
சிவசங்கர்.


Monday, June 28, 2010

என்னவள்!


என் காதலுக்கும்,

கவிதைகளுக்கும்,

கனவுகளுக்கும்,

எனக்கும் உரியவள்!


--சிவசங்கர்.

Tuesday, June 22, 2010

சொல்லாக் காதல்!


உன்மீதான காதலை,
இசையாய் வடிக்கவில்லை!
ஓவியமாய் வரையவில்லை!
சிற்பமாய் செதுக்கவில்லை!
சோறாய் சமைக்கவில்லை!
கோலமாய் இடவில்லை!
நடனமாய் ஆடவில்லை!
இதெல்லாம் செய்யவில்லை- ஆனால்,
உன்னிடம் காதல் சொல்ல வார்த்தையே கிடைக்கவில்லை!

-- சிவசங்கர்.

ஆங்கிலத்தில் புலமை இல்லை!
ஆங்கில வார்த்தைகளை ஆக்கிரமிக்கிறேன்
சில சமயம் களவாடுகிறேன், உனக்கு
குறுஞ் செய்தி அனுப்புவதற்கு!
காதலுக்கு மொழி ஒன்றும்
தடை அல்ல ஆனால்- என்
தமிழ் உன்னை இனிதாக்கக் காணோம்!
கண்ணில் தேங்கிய காதலும்,
வாய் தோய்ந்த வார்த்தையும்,
ரிப்ளை இல்லா மெசேஜ் உம்,
வளரும் என் காதலும்,
பின்னர் நீயும்,
என் தனிமையும்.
காதலுடன் காத்திருப்பேன்- கண்ணே
உன் வருகைக்காய்!

- சிவசங்கர்.

Wednesday, May 19, 2010

கணேஷன் பொறந்த நாளு.


பிறந்து என்ன சாதிச்ச?
இருந்து என்ன சாதிச்ச?
என்னவெல்லாம் சொன்னாலும்,
வெக்கம் இல்ல, துக்கம் இல்ல
கொண்டாடுறே பொறந்த நாளை!
வெங்காயம் பச்சைமிளகாய்
கிப்ட்ஆ கொடுத்தாலும்,
நல்லா இருன்னு எல்லாரும்
வாழ்த்தினாலும்- வெளங்காத
இந்த நார வாயால
நானும் வாழ்த்தறேன்!
"நல்லா இரு!"

- சிவசங்கர் மற்றும் நண்பர் குலாம்.

Sunday, May 9, 2010

காதலுடன்.......


கனவுகளுக்காய்
உறங்கப் போகிறேன்
காதலுடன்!!

--சிவசங்கர்.

எனைப் பற்றி........


பார் பிடித்த தினமதுவும்,
பால் கறந்த பல நாளும்,
சீர் உழுத பெருந்தினமும்,
கார் பொய்த்த நாள்தனிலே,
கருந்தினமாய் ஆகுமடா!
ஏர் பிடித்துத் தினந்தோறும்
ஏகாந்தமாய் வாழ்ந்து வந்தால்
பார் பிடித்த கிறுக்கெல்லாம்
சுகந்தமாய் மாறுமடா!!
பார்பிடிக்க, ஏர்பிடிக்க
மறந்த ஓர்தினத்தில்,
பிறப்பதற்கும் ஆளில்லை,
இறப்போம் அன்றோ?!
அறிவுரையை கவி பொழிந்து,
அறிவியலில் ஐக்கியமான
ஒரு கையாலாகாத கவிஞன்!
-நான்.

---சிவசங்கர்.

காதல்!!


பெண்ணுக்காய் எழுத மனமின்றி
பேனாவுக்காய் எழுதினேன்
பல கவிதை!- உனைக்
காதலிப்பதற்கு முன்னால்!
உன்விழிப் பார்வை
பட்டவுடன் பேனாவாய்
எழுதுகிறது பல கவிதை!

- பேனாவுடன் சிவசங்கர்.

உனக்காய்!


இனிய இரவில்,
இதயப் பூக்களுடன்
இன்னும் வாழ்கிறேன்-
உனக்காய்!

- சிவசங்கர்.

உன்னைப் பற்றி.......


கவிதை எழுத எனக்கு
கருப்பொருள் போதவில்லை!
கருப்பொருளின்றி கவிதை
முனையவும் ஆர்வமில்லை!
கவிதையும் கருப்பொருளுமின்றி
எழுத மனமில்லை!- ஆனால்
உன்னைப் பார்த்தால், ஏனோ
பல கவிதை தோணுதடி!!

- சிவசங்கர்.

காதல்!


கிழிக்கப்பட்ட மனதில்
ஒதுக்கப்பட்ட பூக்களுடன்
இன்னும் காதலிக்கிறேன்
உன்னை!

- சிவசங்கர்.

Tuesday, April 20, 2010

காதல் செய்!


கருத்துரு கண்ணொடு
விழித்தெழும் நிதமதுவும்
பனித்திரு பிறை நுதலும்
வெயில் பொழுதும் பனியாக்க,
பனியடித்தால் வெம்மையாக்க
காதல் செய்வீர்!
மாதுவை அன்றேல் மதுவை!