Wednesday, May 19, 2010

கணேஷன் பொறந்த நாளு.


பிறந்து என்ன சாதிச்ச?
இருந்து என்ன சாதிச்ச?
என்னவெல்லாம் சொன்னாலும்,
வெக்கம் இல்ல, துக்கம் இல்ல
கொண்டாடுறே பொறந்த நாளை!
வெங்காயம் பச்சைமிளகாய்
கிப்ட்ஆ கொடுத்தாலும்,
நல்லா இருன்னு எல்லாரும்
வாழ்த்தினாலும்- வெளங்காத
இந்த நார வாயால
நானும் வாழ்த்தறேன்!
"நல்லா இரு!"

- சிவசங்கர் மற்றும் நண்பர் குலாம்.

Sunday, May 9, 2010

காதலுடன்.......


கனவுகளுக்காய்
உறங்கப் போகிறேன்
காதலுடன்!!

--சிவசங்கர்.

எனைப் பற்றி........


பார் பிடித்த தினமதுவும்,
பால் கறந்த பல நாளும்,
சீர் உழுத பெருந்தினமும்,
கார் பொய்த்த நாள்தனிலே,
கருந்தினமாய் ஆகுமடா!
ஏர் பிடித்துத் தினந்தோறும்
ஏகாந்தமாய் வாழ்ந்து வந்தால்
பார் பிடித்த கிறுக்கெல்லாம்
சுகந்தமாய் மாறுமடா!!
பார்பிடிக்க, ஏர்பிடிக்க
மறந்த ஓர்தினத்தில்,
பிறப்பதற்கும் ஆளில்லை,
இறப்போம் அன்றோ?!
அறிவுரையை கவி பொழிந்து,
அறிவியலில் ஐக்கியமான
ஒரு கையாலாகாத கவிஞன்!
-நான்.

---சிவசங்கர்.

காதல்!!


பெண்ணுக்காய் எழுத மனமின்றி
பேனாவுக்காய் எழுதினேன்
பல கவிதை!- உனைக்
காதலிப்பதற்கு முன்னால்!
உன்விழிப் பார்வை
பட்டவுடன் பேனாவாய்
எழுதுகிறது பல கவிதை!

- பேனாவுடன் சிவசங்கர்.

உனக்காய்!


இனிய இரவில்,
இதயப் பூக்களுடன்
இன்னும் வாழ்கிறேன்-
உனக்காய்!

- சிவசங்கர்.

உன்னைப் பற்றி.......


கவிதை எழுத எனக்கு
கருப்பொருள் போதவில்லை!
கருப்பொருளின்றி கவிதை
முனையவும் ஆர்வமில்லை!
கவிதையும் கருப்பொருளுமின்றி
எழுத மனமில்லை!- ஆனால்
உன்னைப் பார்த்தால், ஏனோ
பல கவிதை தோணுதடி!!

- சிவசங்கர்.

காதல்!


கிழிக்கப்பட்ட மனதில்
ஒதுக்கப்பட்ட பூக்களுடன்
இன்னும் காதலிக்கிறேன்
உன்னை!

- சிவசங்கர்.