Wednesday, June 30, 2010

காதல் சதுரங்கம்!

நட்புக் குதிரைகள்
வெட்டுப்பட்டநேரத்தில்,
பதினாறு கட்டம் நகர
கலங்காமல் காத்திருக்க,
மந்திரியார் கூட்டத்துடன்
மந்தகாசமாய் புன்னகைக்கிறாய்!
வெட்டுப்பட்ட சேவகர்கள்
வெறித்த பார்வையால் எனை நோக்க,
பதினைந்து கட்டங்கள்
பல்நோக்கில் கடந்துவர,
ஒற்றை நகற்றலுக்குபின் என்னுடன்
விளையாட வருவாயா?
-
காத்திருக்கும்........
சிவசங்கர்.


Monday, June 28, 2010

என்னவள்!


என் காதலுக்கும்,

கவிதைகளுக்கும்,

கனவுகளுக்கும்,

எனக்கும் உரியவள்!


--சிவசங்கர்.

Tuesday, June 22, 2010

சொல்லாக் காதல்!


உன்மீதான காதலை,
இசையாய் வடிக்கவில்லை!
ஓவியமாய் வரையவில்லை!
சிற்பமாய் செதுக்கவில்லை!
சோறாய் சமைக்கவில்லை!
கோலமாய் இடவில்லை!
நடனமாய் ஆடவில்லை!
இதெல்லாம் செய்யவில்லை- ஆனால்,
உன்னிடம் காதல் சொல்ல வார்த்தையே கிடைக்கவில்லை!

-- சிவசங்கர்.

ஆங்கிலத்தில் புலமை இல்லை!
ஆங்கில வார்த்தைகளை ஆக்கிரமிக்கிறேன்
சில சமயம் களவாடுகிறேன், உனக்கு
குறுஞ் செய்தி அனுப்புவதற்கு!
காதலுக்கு மொழி ஒன்றும்
தடை அல்ல ஆனால்- என்
தமிழ் உன்னை இனிதாக்கக் காணோம்!
கண்ணில் தேங்கிய காதலும்,
வாய் தோய்ந்த வார்த்தையும்,
ரிப்ளை இல்லா மெசேஜ் உம்,
வளரும் என் காதலும்,
பின்னர் நீயும்,
என் தனிமையும்.
காதலுடன் காத்திருப்பேன்- கண்ணே
உன் வருகைக்காய்!

- சிவசங்கர்.